கோலா மீன் வடை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கோலா மீன் - 6

சின்ன வெங்காயம் - 100 கிராம்

பச்சை மிளகாய் - 3

மல்லித்தழை - ஒரு பிடி

மஞ்சள்பொடி - ஒரு தேக்கரண்டி

சீரகப்பொடி - ஒரு தேக்கரண்டி

மிளகுப்பொடி - ஒரு தேக்கரண்டி

பெருஞ்சீரகப்பொடி - அரை தேக்கரண்டி

மிளகாய்ப்பொடி - ஒரு தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

தேங்காய் - பாதி மூடி

பொட்டுக்கடலை - ஒரு தேக்கரண்டி

முட்டை - 2

எண்ணெய் - 100 மில்லி

இஞ்சி பூண்டு விழுது - அரை தேக்கரண்டி

கரம் மசாலா - அரை தேக்கரண்டி

செய்முறை:

முதலில் மீனைக் கழுவி உப்பு போட்டு உரசி சுத்தம் செய்யவும். பின்பு ஒரு பாத்திரத்தில் பாதியளவு தண்ணீர் வீட்டு கொதிக்க விடவும்.

தண்ணீர் கொதித்த பின்பு மீனை அதில் போட்டு வேக விடவும். மீன் வெந்த பின்பு எடுத்து ஒரு தட்டில் வைத்து ஆற விடவும்.

பின்பு அதில் உள்ள அனைத்து முள்ளையும் எடுத்து உதிர்த்து வைத்துக் கொள்ளவும்.

பின்பு வெங்காயம், பச்சை மிளகாய், மல்லி தழை ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

தேங்காயை துருவி பொட்டுக்கடலை சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும். பின்பு உதிர்த்து வைத்துள்ள மீனில் நறுக்கிய மிளகாய், வெங்காயம், மல்லிதழை, மசாலா பொடிகள், தேங்காய், இஞ்சி பூண்டு விழுதுகள், உப்பு, முட்டை அனைத்தையும் ஒன்றாக பிசறவும்.

பின்பு ஒரு நாண் ஸ்டிக் பேனில் எண்ணெயை காயவிட்டு மீன் கலவையை வடைகளாக தட்டி போடவும்.

லேசான தீயில் இரு புறமும் சிவக்க வேகவிட்டு எடுக்கவும். இதுவே கோலா மீன் வடை.

குறிப்புகள்: