கோலா புட்டு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கோலா மீன் - 10

தேங்காய் துருவல் - ஒரு கப்

மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை

மசாலாத்தூள் - ஒரு ஸ்பூன்

பெரிய வெங்காயம் - 2

பச்சை மிளகாய் - 3

இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்

கறிவேப்பிலை - ஒரு கொத்து

எண்ணெய் - 5 அல்லது 6 ஸ்பூன்

உப்பு - ஒரு ஸ்பூன்

செய்முறை:

கோலா மீனை சுத்தம் செய்து, சிறிது உப்பும், மஞ்சள் தூளும் போட்டு, வேகும் அளவு மட்டும் லேசாக தண்ணீர் சேர்த்து வேகவைத்துக் கொள்ளவேண்டும்.

வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

மீன் வெந்தவுடன் அதன் முட்களை நீக்கி, தயார் பண்ணி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை அனைத்தையும் அத்துடன் போட்டு, இஞ்சி பூண்டு விழுது, மசாலாத்தூள், உப்பு சேர்த்து நன்றாக பிரட்டிக் கொள்ள வேண்டும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி, கலந்து வைத்துள்ள மீன் கலவையை கொட்டி நன்றாக வறுக்க வேண்டும்.

மீன் முறுக ஆரம்பிக்குபோது, துருவிய தேங்காயை கொட்டி சுமார் 5 நிமிடங்கள் வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

குறிப்புகள்: