கோதுமை மாவு அப்பம்
0
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - ஒரு கப்
அரிசி மாவு - கால் கப்
வெல்லம் - ஒரு கப்
சோடா மாவு - கால் தேக்கரண்டி
ஏலக்காய் - இரண்டு
உப்பு - ஒரு பின்ச்
தேங்காய் - இரண்டு பத்தை (சிறிய பல்லாக அரிந்தது)
சிறிய வாழைப்பழம் - ஒன்று (அ) பெரியது பாதி
செய்முறை:
வெல்லத்தை தண்ணீர் விட்டு கரைத்து மண் இல்லாமல் வடிகட்டவும்.
கோதுமை மாவில் வெல்லம் தண்ணீர், உப்பு, வாழைப்பழம், ஏலம் தட்டி போட்டு தேங்காய் பல்லு, அரிசி மாவு, சோட மாவு அனைத்தையும் கெட்டியாக கலந்து குழிக்கரண்டி அளவு எடுத்து எண்ணெயில் ஊற்றி டீப் ப்ரை செய்யவும். எண்ணெயை நன்றாக வடித்து பின் சாப்பிடவும்.