கோதுமை சோறு (1)

on on on on on 1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

உடைத்த கோதுமை - அரை படி

பச்சை மிளகாய் - 2

வெங்காயம் - 2

தக்காளி - 4

சிறிய கேரட் - ஒன்று

மல்லிக்கீரை - பாதி கட்டு

ஏலக்காய், பட்டை, கிராம்பு - தலா ஒன்று

இஞ்சி பூண்டு விழுது - ஒரு டேபிள் ஸ்பூன்

தேங்காய்ப்பால் - 150 மில்லி

தண்ணீர் - ஒரு லிட்டர்

எண்ணெய் - 5 அல்லது 6 டேபிள் ஸ்பூன்

சீனி - ஒரு சிறிய ஸ்பூன்

உப்பு - 3/4 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

பச்சை மிளகாயை நீளவாக்கில் கீறிக்கொண்டு, வெங்காயம், தக்காளி, கேரட்டை நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி பச்சை மிளகாய், பாதி வெங்காயம், ஏலக்காய், பட்டை, கிராம்பு போட்டு தாளித்து, பிறகு இஞ்சி பூண்டு விழுது, மல்லிக்கீரை போட்டு தாளிக்கவும்.

அதனுடன் நறுக்கிய கேரட், தக்காளி, மீதமுள்ள வெங்காயம் போட்டு வதக்கவும்.

வதங்கியவுடன் அளந்து வைத்துள்ள தண்ணீர், தேங்காய்ப்பாலை ஊற்றி உப்பு, சீனி சேர்க்கவும்.

கொதிவந்தவுடன் உடைத்த கோதுமையை கொட்டி கிளறிவிட்டு தம்மில் போட்டு வேக வைக்கவும்.

குறிப்புகள்: