கோதுமை சோறு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

இரண்டாக உடைத்த கோதுமை - இரண்டரை கப்

வெங்காயம் - ஒன்று

தக்காளி - இரண்டு

பச்சைமிளகாய் - இரண்டு (சிறிய மிளகாய் என்றால் 3)

இஞ்சி பூண்டு விழுது - ஒரு கரண்டி

மிளகாய்த்தூள் - ஒரு கரண்டி

கரம் மசாலாத்தூள் - ஒரு டேபிள் ஸ்பூன்

பசும்பால் - 3 கப்

தண்ணீர் - 3 கப்

எண்ணேய் +நெய் - ஒரு கரண்டி

பட்டை - ஒரு துண்டு

கிராம்பு ஏலக்காய் - தலா இரண்டு

அன்னாசிபூ - ஒன்று

ஜாதிப்பூ - ஒன்று

கேசரிகலர் - ஒரு சிட்டிகை

உப்பு - இரண்டு டேபிள்ஸ்பூன்

செய்முறை:

வெங்காயம் தக்காளியை சிறு துண்டுகளாக வெட்டி வைக்கவும். மிளகாயை இரண்டாக கீறிவைக்கவும்.

ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி, பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் அன்னாசி பூவைப் போட்டு தாளிக்கவும். அதில் நறுக்கின வெங்காயம் மற்றும் உப்பு சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.

அத்துடன் நறுக்கின தக்காளியையும் சேர்த்து நன்கு கிளறிவிட்டு வதக்கவும். பின்னர் இஞ்சி, பூண்டு, மிளகாயை போட்டுக் கிளறவும்.

அதன் பிறகு மிளகாய்தூள், மசாலாதூள் மற்றும் கலர் பொடி போட்டு கிளறவும்.

அதில் பாலை ஊற்றி கிளறிவிட்டு கொதிக்கவிடவும்.

கொதித்ததும் கழுவிய கோதுமையை போட்டு கிளறி மூடியை போட்டு வேகவிடவும்.

இடை இடையில் மூடியைத் திறந்து கிளறி விடவும்.

நன்கு வெந்து சாதம் போல் வந்தவுடன் அடுப்பில் இருந்து இறக்கவும்.

இப்போது சுவையான கோதுமை சோறு தயார்.

குறிப்புகள்: