கோதுமை கறி பிரியாணி
தேவையான பொருட்கள்:
இரண்டாக உடைத்த கோதுமை - இரண்டரை கப்
ஆட்டுகறி - 250 கிராம்
வெங்காயம் - ஒன்று
தக்காளி - இரண்டு
பச்சைமிளகாய் - இரண்டு
இஞ்சி பூண்டு விழுது - இரண்டு கரண்டி
மிளகாய்தூள் - ஒரு கரண்டி
கரம் மசாலாத்தூள் - ஒரு கரண்டி
எண்ணெய் + நெய் - 4 கரண்டி
பட்டை - ஒரு துண்டு
கிராம்பு ஏலக்காய் - தலா இரண்டு
தயிர் - இரண்டு கப்
செய்முறை:
வெங்காயம், தக்காளியை நறுக்கி வைக்கவும். மிளகாயை இரண்டாக கீறி வைக்கவும்.
சட்டியில் எண்ணெய் ஊற்றி, பட்டை, கிராம்பு ஏலக்காய் போட்டு தாளிக்கவும்.
பின்பு நறுக்கின வெங்காயம் போட்டு உப்பு போடவும். இரண்டு நிமிடம் வதக்கி தக்காளி போட்டு கிளறி இஞ்சி பூண்டு மிளகாயை போடவும்.
அதனுடன் கறியை போட்டு கிளறி மசாலாத்தூள், தயிரை ஊற்றி ஒரு கப் தண்ணீர் ஊற்றி குக்கரில் மூன்று விசில் விட்டு வேகவிடவும். பாதி வெந்ததும் அதனுடன் கோதுமையை போட்டு மூடியை போட்டு வேகவிடவும்.
கோதுமை, கறி எல்லாம் நன்கு வெந்ததும் மல்லிக்கீரை தூவி அடுப்பை அணைக்கவும்.