கோதுமை இனிப்பு கஞ்சி
தேவையான பொருட்கள்:
உடைத்த கோதுமை - அரை கப்
ஓட்ஸ் - கால் கப்
ஜவ்வரிசி - 2 மேசைக்கரண்டி
சீனி - 6 மேசைக்கரண்டி
பால் - 1 1/2 டம்ளர்
கன்டன்ஸ்டு மில்க் - 50 மி.லி
ரோஸ் வாட்டர் - 3 தேக்கரண்டி
ஏலக்காய் - 3
முந்திரி - 10
நெய் - 2 தேக்கரண்டி
பட்டை - சிறிய துண்டு
செய்முறை:
கஞ்சி செய்ய மேற்சொன்ன தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
உடைத்த கோதுமையையும், ஓட்ஸையும் குறைந்தது இருபது நிமிடம் ஊற வைக்கவும்.
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி முந்திரியை உடைத்து சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
பின்பு அதே பாத்திரத்தில் பட்டை, ஜவ்வரிசியை போட்டு பொரிய விடவும்.
ஜவ்வரிசி பொரிந்ததும் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி ஊற வைத்த கோதுமை மற்றும் ஓட்ஸை சேர்க்கவும். மீதமான தீயில் வைத்து 5 நிமிடம் கொதிக்க விடவும். அடிப்பிடிக்க விடாமல் இரண்டு, மூன்று முறை கிளறி விடவும்.
பிறகு அதில் சீனி, கால் தேக்கரண்டி உப்பு மற்றும் பால் சேர்த்து கிளறி விடவும்.
இரண்டு நிமிடம் கொதித்ததும், கண்டன்ஸ்டு மில்க், பொடி செய்த ஏலக்காய், ரோஸ் வாட்டர் சேர்த்து நன்கு கிளறி இரண்டு நிமிடம் கொதித்ததும் வறுத்த முந்திரிகளை சேர்த்து இறக்கவும். முந்திரியோடு உலர்ந்த திராட்சையும் வறுத்து சேர்க்கலாம்.
சுவையான கோதுமை இனிப்பு கஞ்சி தயார். இந்த இனிப்பை கல்யாண விசேஷங்களிலும் மற்ற பெரிய விசேஷங்களிலும் பிரியாணி அயிட்டங்களுடன் செய்வார்கள். மிகவும் சுவையாக இருக்கும்.