கொழுக்கட்டை கூழ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

அரிசி மாவு - 1 1/4 கப்

சீனி - ஒரு கப்

பொடித்த சீனி - ஒரு மேசைக்கரண்டி

டவுன் ஃபன்டா - 7 இலைகள்

தேங்காய் - ஒன்று

வெண்ணெய் - ஒரு தேக்கரண்டி

உப்பு - கால் தேக்கரண்டி

செய்முறை:

டவுன் ஃபன்டா இலைகளை சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். மற்ற தேவையான பொருட்கள் எல்லாவற்றையும் தயார்படுத்தி வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். இலைகளை கசக்கி விட்டு தண்ணீரில் போட்டு மூடி வைத்து கொதிக்க விடவும்.

தண்ணீர் கொதித்ததும் இறக்கி இலைகள் இல்லாமல் தண்ணீரை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.

தேங்காயை துருவி மிக்ஸியில் போட்டு அரை கப் தண்ணீர் ஊற்றி திக்கான பால் எடுத்துக் கொள்ளவும். மீண்டும் அந்த தேங்காய் சக்கையுடன் ஒரு கப் தண்ணீர் ஊற்றி அரைத்து பிழிந்து பால் எடுத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் அரிசி மாவுடன் வெண்ணெய், உப்பு, பொடி செய்த சீனி, கால் கப் திக்கான பால் ஊற்றி பிசைந்துக் கொள்ளவும். அதனுடன் பிறகு தண்ணீர் பாலை சிறிது சிறிதாக ஊற்றி இடியாப்ப மாவு பதத்தில் பிசைந்துக் கொள்ளவும்.

பிசைந்த மாவில் ஒரு பெரிய ஆரஞ்சு பழ அளவு மாவை எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு அரை கப் தண்ணீர் பாலை ஊற்றி கரைத்துக் கொள்ளவும்.

மீதம் உள்ள மாவில் சிறு சிறு உருண்டைகளாக செய்யவும். தேவையான வடிவங்களில் செய்யவும். எல்லா உருண்டைகளும் சீரான உருண்டைகளாக இருக்க வேண்டும். அப்போது தான் ஒரே மாதிரியாக வேகும்.

வடிகட்டி வைத்திருக்கும் டவுன் ஃபன்டா தண்ணீரை கொதிக்க வைக்கவும். கொதித்ததும் செய்து வைத்திருக்கும் கொழுக்கட்டையை போட்டு மூடி விடவும். கொழுக்கட்டைகளை போட்ட உடனே கிளற கூடாது.

5 நிமிடம் கழித்து கொழுக்கட்டைகள் வெந்ததும் சீனியை போட்டு 5 நிமிடம் கழித்து கரைத்து வைத்திருக்கும் கொழுக்கட்டை மாவை அதில் ஊற்றி 2 நிமிடம் கொதிக்க விடவும்.

கொதிக்கும் போது திக்கான தேங்காய் பாலை ஊற்றி கிளறி இறக்கவும்.

சுவையான டவுன் ஃபன்டா கொழுக்கட்டை கூழ் ரெடி.

குறிப்புகள்: