கொத்து கறி முட்டை பரோட்டா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மாவு குழைக்க:

மைதா மாவு - மூன்று பெரிய டம்ளர்

உப்பு - ஒரு தேக்கரண்டி

சோடா மாவு - ஒரு பின்ச்

முட்டை - ஒன்று

உருக்கிய டால்டா - இரண்டு மேசைக்கரன்டி

முதலில் மேலே குறிப்பிட்ட பொருட்களை குழைத்து பத்து உருண்டைகள் வரும் அதில் எண்ணெய் தடவி வைக்கவும்.

கீமா தயாரிக்க:

கீமா - 200 கிராம்

வெங்காயம் - கால் கிலோ

இஞ்சி பூண்டு பேஸ்ட் - இரண்டு தேக்கரண்டி

கொத்து மல்லி தழை - அரை கட்டு ( பொடியாக நருக்கியது)

பச்சை மிளகாய் - இரண்டு

மிளகாய் தூள் - அரை தேக்கராண்டி

மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி

தக்காளி - ஒன்று

பட்டை - ஒன்று

கரம் மாசாலாதுள் - கால் தேக்கரண்டி

முட்டை - ஒன்று

கடைசியில் மாவில் தேய்க்க

முட்டை - நான்கு

லெமென் - ஒன்று

மிளகு தூள் - கால் தேக்கரண்டி

செய்முறை:

கீமாவை நல்ல கழுவி தண்ணீரை வடித்து வைக்கவும்.

கீமாவில் வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி தவிர அனைத்து பொருட்களையும் சேர்த்து பிரட்டவும்.

தனியாக ஒரு தேக்கரன்டி எண்ணெய் ஊற்றி ஒரு பட்டை போட்டு வெங்காயம் பச்சை மிளகாய் லேசாக வதக்கி கீமாவையும் சேர்த்து கடைசியில் கொத்தமல்லி கீரை, ஒரு முட்டை கலக்கி ஊற்றி வதக்கி ஆற வைக்கவும்.

மாவில் கலக்க நான்கு முட்டையை நல்ல அடித்து அதில் லெமென் ஜுஸ், ஒரு பின்ச் உப்பு, மிளகு தூள் போட்டு கலக்கி வைக்கவும்.

ஊறிய மாவை ஒவ்வொன்றாக நல்ல சப்பாத்தி பலகையில் மாவு தடவி தேய்க்கவும் நல்ல பெரிய ரவுண்டு வரும் அதில் கலக்கிய முட்டையை சாப்பாத்தி முழுவதும் தடவி கீமா கலவையை ஒரு மேசைக்கரண்டி வைத்து ரொட்டி முழுவதும் பரப்பி விடவும். அப்போது தான் எல்லா இடத்திலும் பரவும். வைத்து விட்டு செவ்வக வடுவில் மடிக்கவும் இப்படியே பத்து ரொட்டியையும் செய்து ஒரு தட்டில் மாவு தடவி ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் வைத்து ஃப்ரீஜரில் வைத்து விட்டால் தேவைக்கு எடுத்து சுடுவதற்கு பத்து நிமிடம் முன் வைத்து சுட்டால் போதும்.

சுடும் போது எண்ணெயுடன் டால்டா (அ) பட்டர் கலந்து கொள்ளவும்.

தவ்வாவில் போட்டு இரண்டு பக்கமும் பொன் முறுவலாக பொரித்து எடுக்கும் முன் ஒரு பக்கத்தில் தோசை கரண்டியால் குருக்கிலும் நெடுக்கிலும் நீட்டாக கட் பன்ணி விடவும். பிய்த்து சாப்பிடுவதற்கு வசதியாக இருக்கும்.

இந்த முறையில் முட்டை கொத்து பரொட்டா செய்தால் வாசனை பத்து வீட்டு கதவை தட்டும்.

குறிப்புகள்: