கொத்துக்கறி வேர்கடலை மசாலா
தேவையான பொருட்கள்:
கொத்துக்கறி(மட்டன்) - கால் கிலோ
பச்சை வேர்கடலை - 100 கிராம்
வெங்காயம் - 1
தக்காளி - 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
கரம் மசாலா - கால் ஸ்பூன்
சில்லி பவுடர் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
மிளகாய் - 2
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
மல்லி இலை - கொஞ்சம்
தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
முந்திரி - 2
உப்பு - தேவைக்கு
செய்முறை:
கொத்துக்கறியை நன்கு அலசி நீர் வடிகட்டிக்கொள்ளவும்.
தக்காளி, வெங்காயம், மல்லி இலை கட் செய்து வைக்கவும். தேங்காய் முந்திரி அரைத்து வைக்கவும். வேர்க்கடலையையும் அலசி வைக்கவும்.
குக்கரில் எண்ணெய் விட்டு, வெங்காயம் வதக்கி, இஞ்சி பூண்டு, கரம்மசாலா, தக்காளி, மல்லிஇலை, மிளகாய், உப்பு சேர்த்து வதக்கவும். பின்பு சில்லி பவுடர், மஞ்சள் தூள் சேர்க்கவும். கொத்துக்கறி சேர்த்து பச்சை வேர்க்கடலையை சேர்க்கவும். ஒரு கொதிவந்ததும், தேங்காய் முந்திரி அரைத்தது சேர்த்து பிரட்டி 3 விசில் வைத்து இறக்கவும்.
ஆவி அடங்கியதும் நீர் நின்றால் வற்றவைத்தால் கொத்துக்கறி வேர்க்கடலை மசாலா ரெடி.
சுவையான கொத்துக்கறி வேர்க்கடலை மசாலாவை சாதம், சப்பாத்தி உடன் சாப்பிடலாம்.