கொத்துகறி பொரியல்
0
தேவையான பொருட்கள்:
கொத்துகறி - அரைகிலோ
வெங்காயம் - ஒன்று
இஞ்சி பூண்டு விழுது - மூன்று
மிளகாய்தூள் - இரண்டு கரண்டி
கரம் மசாலாத்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - நான்கு கரண்டி
செய்முறை:
வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.
ஒரு சட்டியில் எண்ணெய் விட்டு வெங்காயம் தவிர அனைத்தையும் சேர்த்து ஒரு கிளாஸ் தண்ணீர் விட்டு வேக விடவும்.
பின் தண்ணீரை வற்றவிடவும் கடைசியில் வெங்காயத்தை போட்டு கிளறி பொரிந்ததும் அடுப்பை அணைக்கவும்.