கொண்டைக்கடலை சுண்டல்

on on on on on 1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

கொண்டைக்கடலை - 250 கிராம்

வெங்காயம் - ஒன்று

கேரட் - ஒன்று

மிளகாய்தூள் - ஒரு கரண்டி

கரம் மசாலாத்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்

மஞ்சள்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்

கடுகு - ஒருடேபிள்ஸ்பூன்

கறிவேப்பிலை - ஒரு கொத்து

எலுமிச்சைப்பழம் - ஒன்று

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கொண்டைக்கடலையை முதல் நாள் இரவே ஊற வைக்கவும்

அதை குக்கரில் இரண்டு விசில் விட்டு வேக வைக்கவும்

வெங்காயம், கேரட்டை மிகவும் பொடியாக நறுக்கவும்

ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து மிளகாய்தூள், மஞ்சள்தூள், மசாலாத்தூள் போட்டு தாளித்து வேகவைத்த கடலையை கொட்டி ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட்டு அதிலேயே கொஞ்சம் கடலையை மசித்து விடவும்.

தண்ணீர் வற்றி கிரேவி போல் வந்ததும் அடிப்பில் இருந்து எடுத்து பரிமாறும் போது மேலே கேரட், வெங்காயம் தூவி எலுமிச்சைச்சாறு ஊற்றி பரிமாறவும்.

குறிப்புகள்: