கைமா பூரி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மைதா - 2 கப்

முட்டை - 1

எண்ணெய் - 1 டீஸ்பூன்

உப்பு - சுவைக்கு

பூரணத்திற்கு

கைமா - 100 கிராம்

வெங்காயம் - 1

உருளை - 2

பச்சைமிளகாய் - 2

மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்

மல்லி இலை - சிறிது

உப்பு - சுவைக்கு

எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு

செய்முறை:

முட்டை, எண்ணெய், உப்பு அனைத்தையும் நன்கு கலக்கி சிறிது நீர் சேர்த்து மைதாவை சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.

பொடியாக நறுக்கிய உருளைக்கிழங்கை உப்பு சேர்த்து வேக வைத்துக்கொள்ளவும்.

கைமாவையும் உப்பு சேர்த்து வரட்டிக் கொள்ளவும்.

வெங்காயம், பச்சை மிளகாய், மல்லி அனைத்தையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு நறுக்கியவற்றை வதக்கவும்.

மிளகாய்தூள் சிறிது உப்பு சேர்க்கவும். வேக செய்தவற்றை சேர்த்துக்கிளறி கெட்டியானதும் இறக்கி ஆறவிடவும்.

மைதாவை சிறு உருண்டைகளாக்கிக்கொள்ளவும். சப்பாத்திக்கட்டையில் வைத்து மெல்லிய சப்பாத்திகளாக தேய்க்கவும். நடுவில் பூரணத்தை வைத்து நான்கு பக்கமும் பூரணம் தெரியாவண்ணம் சதுரமாக மடித்து விடவும். இதே போல் எல்லா சப்பாத்திகளையும் சதுர பூரிகளாக்கிக் கொள்ளவும்.

தவாவை அடுப்பில் வைத்து ஒரு குழிக்கரண்டி அளவு எண்ணெய் விட்டு மிதமான தீயில் நான்கு, நான்கு பூரிகளாக பொன்னிறத்தில் இரண்டு பக்கமும் சுட்டு எடுக்கவும்

தொட்டுக்கொள்ள ஊறுகாய், சாஸ் ஏற்றவை

குறிப்புகள்: