கேரட் பட்டாணி ரைஸ் (1)
0
தேவையான பொருட்கள்:
பாசுமதி அரிசி - அரை கிலோ
கேரட் - 150 கிராம்
பட்டாணி - 150 கிராம்
முட்டை - இரண்டு
சோயாசாஸ் - இரண்டு கரண்டி
மிளகுத்தூள் - ஒரு கரண்டி
அஜினோமோட்டோ - ஒரு டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - ஐந்து கரண்டி
உப்பு - ஒரு கரண்டி
செய்முறை:
அரிசியை உதிர் உதிராக வேக வைத்துக் கொள்ளவும். கேரட், பட்டாணியை ஆவியில் வேக வைத்துக் கொள்ளவும்.
வெந்த கேரட்டை தோல் நீக்கி துருவிக் கொள்ளவும்.
ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி முட்டையை ஊற்றி நன்கு கொத்திவிட்டு பொரிக்கவும் முட்டை நன்கு பொரிந்தவுடன் அதில் கேரட், பட்டாணியை போட்டு கிளறி சாதத்தைப்போட்டு சோயாசாஸ் ஊற்றி அஜினோமோட்டோ போட்டு கிளறி அடுப்பை அணைக்கவும்.