கேரட் தேங்காய் பால் மில்க் சேக்
2 - Good!
3 நட்சத்திரங்கள் - 2 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
கேரட் துருவல் - ஒரு கப்
தேங்காய் துருவல் - ஒரு கப்
ஏலப்பொடி - 1/4 ஸ்பூன்
சீனி அல்லது வெல்லம் - 1/4 கப்
தண்ணீர் - ஒரு கப்
செய்முறை:
கேரட் துருவலையும், தேங்காய் துருவலையும் சேர்த்து மிக்ஸியில் அரைத்து, அதை ஒரு லேசான துணியில் வடிகட்டி பால் எடுக்கவும்.
தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்.
அதனுடன் ஏலப்பொடியும், சீனியும் கலந்து, வடிகட்டி கண்ணாடி டம்ளரில் ஊற்றி பரிமாறவும்.
சுவையான மில்க் ஷேக், இது குழந்தைகளுக்கு ரொம்பவும் பிடிக்கும்.