கேரட் கஞ்சி
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - அரை கப் (மிக்ஸியில் பாதியாக திரிச்சி கொள்ள வேண்டும்)
பயத்தம் பருப்பு - மூன்று டேபிள் ஸ்பூன்
கேரட் - ஒன்று பெரியது (பொடியாக நறுக்கியது (அ) துருவியது)
வெங்காயம் - ஒன்று( பெரியது)
தக்காளி - ஒன்று (பெரியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒரு டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி - ஒரு கொத்து
புதினா - இரண்டு ஆர்க்
பச்சை மிளகாய் - இரண்டு
மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தேங்காய் பால் - அரை கப்
எண்ணெய் - இரண்டு டேபிள் ஸ்பூன்
பட்டை,ஏலம்,லவங்கம் - தலா ஒன்று
செய்முறை:
அரிசியையும்,பருப்பையும் ஒன்றாக சேர்த்து ஊற வைக்க வேண்டும்.
குக்கரில் எண்ணெயை காயவைத்து பட்டை,ஏலம்,லவங்கத்தை போட்டு வெங்காயம் போட்டு வதக்கி இரண்டு நிமிடம் சிம்மில் வைத்து வதக்கவும்.
அடுத்து இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து அதையும் இரண்டு நிமிடம் சிம்மில் வைக்கவும்.
பிறகு கொத்தமல்லி பாதி போட்டு கேரட்டை போட்டு வதக்கவும்.
தக்காளியை நீளவாக்கில் நறுக்கி போட்டு பச்சை மிளகாயை இரண்டாக ஒடித்து போட்டு புதினாவை சேர்க்கவும். அடுத்து மிளகாய் தூள், மஞ்சள் தூள் உப்பு சேர்த்து இரண்டு நிமிடம் சிம்மில் வைக்கவும்.
இப்போது இரண்டரை கப் தண்ணீர் ஊற்றவும். ஊற்றி கொதி வந்ததும் ஊறவைத்த அரிசி பருப்பு கலவையை சேர்க்கவும் சேர்த்து நல்ல கொதி வந்ததும் குக்கரை மூடி தீயை சிம்மில் வைத்து மூன்று விசில் விட்டு இறக்கவும்.ஆவி அடங்கியதும் தேங்காய் பால் சேர்த்து கொத்த மல்லி தூவி மேலும் இரண்டு நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும்.