கேதா கஞ்சி
தேவையான பொருட்கள்:
புழுங்கல் அரிசி - 1 கப்
தயிர் - கால் கப்
இஞ்சி பூண்டு விழுது - 4 தேக்கரண்டி
முந்திரி - 10
பச்சை மிளகாய் - 4
எலுமிச்சை - 1
நாட்டு தக்காளி - 4
பெரிய வெங்காயம் -2
புதினா - அரை கப்
கொத்தமல்லி - அரை கப்
நெய் - 50 கிராம்
பட்டை,ஏலக்காய்,கிராம்பு பொடி- 1 ஸ்பூன்
அன்னாசி பூ-1
பட்டை-1
ஏலக்காய்-3
கிராம்பு-3
செய்முறை:
தக்காளியை இரண்டாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். புதினாவும், கொத்தமல்லியும் காம்புடன் சேர்த்து நடுத்தர அளவில் நறுக்கிக் கொள்ளவும்.
பாத்திரத்தில் நெய் விட்டு பட்டை ஏலக்காய் கிராம்பு அன்னாசி பூ முந்திரி மற்றும் பச்சை மிளகாயை போட்டு வதக்கவும்.
அதில் வெங்காயம் மற்றும் உப்பை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். பின்னர் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக கிளறவும்
பின் புதினா, கொத்தமல்லி சேர்த்து சுருளும் வரை வதக்கவும்
தக்காளி சேர்த்து உடைக்காமல் மெதுவாக கிளறவும். பட்டை ஏலக்காய் கிராம்பு தூள் சேர்த்து வதக்கவும்.
எண்ணெய் பிரிந்து வரும் சமயத்தில் தயிர் சேர்த்து கிளறவும்
பின்னர் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.
கொதி வந்ததும் கழுவி சுத்தம் செய்த அரிசியை சேர்க்கவும்.
கஞ்சி வெந்ததும் எலுமிச்சை சாறை ஊற்றி 5 நிமிடங்கள் வைத்திருந்து பின் இறக்கவும்.
கேதா கஞ்சி தயார். நிலக்கடலை சட்னி, கெட்டி தேங்காய் சட்னியுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.