கூவை
தேவையான பொருட்கள்:
பச்சை அரிசி - 1/4 படி
சீனி - 1/4 படி
தேங்காய் - 1(600 ml)
ஏலக்காய் - 6
food colours - 5 or 6 colours
உப்பு - 2 சிட்டிகை
செய்முறை:
அரிசியை 6 மணி நேரம் ஊற வைக்கவும்.
தேங்காயை 3/4 லிட்டர் அளவிர்க்கு திக்காக பால் பிழிந்து எடுத்து கொள்ளவும்.
அரிசி ஊறியதும் கழுவி விட்டு,மிக்ஸியில் போட்டு ஏலக்காய் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல்,தேங்காய் பால் கொஞ்சம் சேர்த்து மையாக அரைக்கவும்.
அரைத்த மாவை ஒரு துணியில் வடிகட்டி,அதனுடன் சீனி,உப்பு சேர்த்து கரைக்கவும்.
ஒரே அளவுள்ள 5 (அ) 6 கோப்பைகளை எடுத்து அதில் கரைத்து வைத்துள்ள மாவை எல்லா கோப்பைகளிலும் ஊற்றவும்.
ஒவ்வொரு கோப்பை மாவிற்கும் உங்களுக்கு விருப்பமான கலர்களை சேர்க்கவும்.
அடுப்பில் இட்லி சட்டியை அல்லது குக்கரில் வைத்து அதனுல் நீர் கொஞ்சம் ஊற்றி நடுவில் ஒரு கலவடையை வைத்து அதன் மேல் ஒரு அலுமினிய சட்டியை வைக்கவும்.
அந்த சட்டியில் முதலில் ஒரு கலர் மாவை ஊற்றி இட்லி சட்டி மூடியை ஒரு துணியால் கட்டி மூடி வேக விடவும்.
10 நிமிடம் கழித்து பார்க்கவும்.
மாவை தொட்டு பார்த்தால் கையில் ஒட்ட கூடாது.
மாவு ஒட்டாமல் வெந்ததும் அதன் மேல் இன்னொரு கலர் மாவை ஊற்றி மூடவும்.
இப்படியே ஒவ்வொரு கலராக வேக விடவும்.
எல்லா கலர் மாவும் வெந்ததும்,அடுப்பிலிருந்து எடுத்து ஆற விட்டு டைமண்ட் வடிவில் வெட்டி எடுக்கவும்.