குறிச்சா
0
தேவையான பொருட்கள்:
அரிசிமாவு - 2 கப்
முட்டை - 2
நெய் - 1/2 கப்
சர்க்கரை - 1 1/2கப்
ஏலப்பொடி - 1/4 டீஸ்பூன்
தேங்காய் - 1 (பெரியது)
செய்முறை:
தேங்காயை கெட்டியாக பால் எடுத்துக்கொள்ளவும். மீதி வரும் இரண்டாம், மூன்றாம் பாலை வேறு எதற்காவது உபயோகித்துக்கொள்ளலாம்.
அத்துடன் ஒரு ஸ்பூன் அளவு நெய்யை வைத்துக்கொண்டு மற்ற நெய்யை கலக்கவும்
தேங்காய்ப்பாலில் முட்டை, சர்க்கரை, ஏலப்பொடி சேர்த்து நன்கு கலக்கவும்.
மாவை சிறிது சிறிதாக சேர்த்து கலக்கவும்.
மாவு கொழுக்கட்டை மாவு பதத்தில் இருக்க வேண்டும்.
சுமார் இரண்டு மணி நேரம் ஊறிய பின் சின்ன சின்ன வட்டங்களாக இட்டு நெய் தடவிய தவாவில் சிறு தீயில் வேகச்செய்யவும்.
வெந்ததும் மறு பக்கம் திருப்பிப் போட்டு வேக வைத்து சாப்பிடவும்.
3 - 6 நாட்கள் வரை கெடாது.