குடல் கத்திரிக்காய்
தேவையான பொருட்கள்:
ஆட்டுக்குடல் - மீடியம் சைஸ் 1
கத்திரிக்காய் - கால் கிலோ
துவரம் பருப்பு அல்லது கடலைப்பருப்பு - 100 கிராம்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
தக்காளி - 2
வெங்காயம் -2
பச்சை மிளகாய் - 2-3
மல்லி, கறிவேப்பிலை - சிறிது
சில்லி பவுடர் - ஒன்றரை டீஸ்பூன்
மல்லி பவுடர் - 2 டீஸ்பூன்
சீரகத்தூள் - அரைஸ்பூன்
மஞ்சள் தூள் - அரைஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
தேங்காய் - 4 டேபிள்ஸ்பூன்
செய்முறை:
குடலை பக்கெட்டில் தண்ணீர் வைத்து மூன்று நான்கு முறை தண்ணீர் ஊற்றி அலசி கொள்ளவும். பின்பு சிறிய பாக்கெட் சுண்ணாம்பு குடலில் தடவி துணிதுவைக்கும் அல்லது மீன் உரைக்கும் கல்லில் வைத்து நன்கு உரைத்து கழுவவும். பின்பு வெந்நீரில் அலசி அரிவாள்மனை கொண்டு துண்டு போடவும். உட்புறம் இருக்கும் கொழுப்பை எடுத்து விடவும்.
வெங்காயம், தக்காளி, மல்லி இலை, கத்திரிக்காய் கட் செய்து வைக்கவும். தேங்காய் அரைத்து வைக்கவும்.
குக்கரில் அரிந்த குடல் துண்டுகள், மஞ்சள் தூள், சில்லி பவுடர் அரைஸ்பூன், மல்லி பவுடர், சீரகத்தூள், ஊற வைக்காத அலசிய பருப்பு இஞ்சி பூண்டு 1 டீஸ்பூன் ,2 டம்ளர் தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும். விசில் வந்தவுடன் குறைத்து அரை மணிநேரம் வைக்கவும். உப்பு போடக்கூடாது. வெந்து விடும்.
வெந்ததை தனியாக எடுத்து வைக்கவும். பின்பு குக்கரில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயம் வதக்கி,1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி, மல்லி, கறிவேப்பிலை, மிளகாய், தக்காளி உப்பு, 1 டீஸ்பூன் சில்லி பவுடர், கத்திரிக்காய் சேர்த்து வதக்கி சிறிது தண்ணீர் சேர்த்து ஒரு விசில் வைக்கவும்.
பின்பு அத்துடன் வேக வைத்த குடல், பருப்பு சேர்க்கவும். அரைத்த தேங்காய் விடவும். உப்பு சரி பார்த்து சிம்மில் வைத்து தேங்காய் வாடை அடங்கியதும் இறக்கவும்.
சுவையான குடல் கத்திரிக்காய் ரெடி. இதனை ப்ளைன் சாதத்தில் வீட்டு சாப்பிடலாம். ரசம் சாதத்திற்கு தொட்டுக்கொண்டும் சாப்பிடலாம்.