குஜராத்தி சீஸ் போண்டா (1)
தேவையான பொருட்கள்:
மக்ரோனி ட்யூப்கள் - ஒரு கப்
எலும்பு நீக்கிய கோழிக்கறி - ஒரு கப்
உருளைக்கிழங்கு - 150 கிராம்
துருவிய சீஸ் - ஒரு கப்
முட்டை - 2
இஞ்சி பூண்டு விழுது - ஒரு மேசைக்கரண்டி
மசாலாத்தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
மிளகுத்தூள் - 2 மேசைக்கரண்டி
தைம் இலை (காய்ந்தது) - ஒரு தேக்கரண்டி
ரஸ்க் தூள் - 2 கப்
உப்பு - 2 தேக்கரண்டி
செய்முறை:
மக்ரோனியை தண்ணீர் ஊற்றி குக்கரில் நன்றாக வேகவைத்து மசிக்கவும்.
உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து விட்டு மசித்துக்கொள்ளவும்.
எலும்பு நீக்கிய கோழிக்கறியை தூள் வகைகள், உப்பு, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும்.
இவையனைத்தையும் துருவிய சீஸுடன் சேர்த்து நன்கு பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, கலக்கிய முட்டையில் நனைத்து ரஸ்க் தூளில் பிரட்டியெடுத்து ஃப்ரீசரில் சுமார் 4 மணி நேரம் வைக்கவும்.
பிறகு சூடான எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.