கீறி முட்டை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

முட்டை - 4

வெங்காயம் - 1 மீடியம் சைஸ்

தக்காளி - 1 மிகச்சிறியது

இஞ்சி பூண்டு பேஸ்ட் - அரை ஸ்பூன்.

எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

மிளகுத்தூள் - அரை ஸ்பூன்

மல்லித்தூள் - 1 ஸ்பூன்

சீரகத்தூள் - அரை ஸ்பூன்

மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்

உப்பு - தேவைக்கு

கறிவேப்பிலை - 2 இணுக்கு

செய்முறை:

முட்டையை அவித்துக்கொள்ளவும். முட்டையின் நான்கு பக்கமும் கீறி விட்டுக்கொள்ளவும், முட்டை முழுதாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். வெங்காயம், தக்காளியை பொடியாக கட் பண்ணிகொள்ளவும்.

கடாயில் எண்ணெய் விட்டு, வெங்காயம், கறிவேப்பிலை, இஞ்சி பூண்டு பேஸ்ட், தக்காளி, உப்பு போட்டு மசிய விட வேண்டும்.

பின்பு மிளகு, மல்லி, சீரகம், மஞ்சள்தூள் வகைகளை சேர்த்து சிம்மில் வைத்து மசாலா வாடை அடங்கியவுடன் கீறிய முட்டையை போட்டு பிரட்டி வைக்கவும்.

சுவையான கீறி முட்டை ரெடி.

குறிப்புகள்: