கீரை மண்டி
1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
முருங்கைகீரை/அகத்தி கீரை -1 கப்
அரிசி கலைந்த நீர்-1/2 கப்
கசகசா -50 கிராம்
தேங்காய் -1/2 கப்(அரைத்தது)
வெங்காயம் -2
வரமிளகாய் -3
கடலைபருப்பு-2 ஸ்பூன்
சீரகத்தூள் -1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் -1/4
செய்முறை:
முருங்கை கீரையை அலசி உருவி வைக்கவும். அகத்திக்கீரை என்றால் நறுக்காமல் உருவினால் போதும்.
கசகசாவை நீரில் வேகும் வரை கொதிக்கவைத்து ஆறவைத்து அரைக்கவும்.
வாணலியில் கீரை,அரிசி கலைந்த நீர்,கசகசா விழுது சேர்த்து நன்கு வேக வைக்கவும்.
இன்னொரு வாணலியில் எண்ணெய் ஊற்றி வரமிளகாய்,கடலை பருப்பு வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
அதில் மஞ்சள் தூள்,சீரகத்தூள்,உப்பு சேர்த்து வதக்கவும்.
வெந்துக்கொண்டிருக்கும் கீரையில் இதை சேர்த்து கிளறவும். கீரை வெந்ததும் தேங்காய் விழுதை சேர்த்து சிறுதீயில் சிறிது நேரம் வைத்து உடனே கீழே இறக்கவும்.