கீமா பட்டாணி மசாலா
0
தேவையான பொருட்கள்:
கீமா - 200கிராம்
வேக வைத்த ப.பட்டாணி - 100கிராம்
இஞ்சி பூண்டு விழுது - 1ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1ஸ்பூன்
மஞ்சள்த்தூள் - 1ஸ்பூன்
வெங்காயம் - 2
தக்காளி - 2
ப.மிளகாய் - 2
கரம் மசாலா - 1ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - 3 கரண்டி
செய்முறை:
கடாயில் எண்ணெய் ஊர்றி வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது 3ஸ்பூன் தண்ணீர் விட்டு வதக்கவும்
ப.மிளக்கய், மிளகாய்த்தூள், மஞ்சள்த்தூள், உப்பு போட்டு பிரட்டவும்.
பொடியாக அரிந்த தக்காளி சேர்க்கவும்.
எண்ணெய் விடும் போது கீமா சேர்க்கவும். 1 கப் தண்ணீர் விட்டு வேகவிடவும்.
15 நிமிடம் கழித்து கரம் மசாலா, ப.பட்டாணி சேர்க்கவும்.
5 நிமிடம் வேக வைத்து இறக்கவும்.