கீமா கிரேவி
தேவையான பொருட்கள்:
கீமா - 200 கிராம்
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
பட்டை, கிராம்பு, ஏலக்காய் தூள் - கால் மேசைக்கரண்டி
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
மல்லி தூள் - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - சிறிதளவு
மிளகு, சீரகம், சோம்பு (மூன்றும் சேர்த்து பொடித்த) தூள் - அரை தேக்கரண்டி
கரம் மசாலா தூள் -அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தயிர் - 1 கப்
எலுமிச்சை - பாதி பழம்
எண்ணெய், நெய் - தேவையான அளவு
செய்முறை:
வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, புதினாவை மெல்லியதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். மற்ற தேவையான பொருட்களையும் தயாராக வைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து சிவக்க தாளிக்கவும்.
பிறகு இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி தக்காளி, கொத்தமல்லி, புதினா, கொத்துக்கறி, தூள் வகைகள், உப்பு, தயிர் சேர்த்து நன்கு வதக்கவும்.
நன்கு வதக்கி எண்ணெய் பிரிந்தவுடன் தேவையென்றால் தண்ணீர் சேர்த்து மூடி வைக்கவும்.
கலவை நன்கு சுண்டி கொத்துக்கறி வெந்தவுடன் அடுப்பை அணைத்து எலுமிச்சை சாறு சேர்த்து கொத்தமல்லி தூவி இறக்கவும்.
சுவையான கீமா கிரேவி ரெடி. சாம்பார் சாதம், தயிர் சாதம், குஸ்கா போன்றவையுடன் நன்றாக இருக்கும். அறுசுவை நேயர்களுக்காக திருமதி. ரிஸ்வானா ஷானுகான் அவர்கள் இந்த குறிப்பினை வழங்கியுள்ளார். நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்தினை பகிர்ந்து கொள்ளவும்.