கீமா கட்லெட்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கீமா - கால் கிலோ

உருளைக்கிழங்கு - நான்கு

வெங்காயம் - மூன்று பெரியது

கேரட் - இரண்டு

பச்சைமிளகாய் - இரண்டு

மிளகாய் தூள் - இரண்டு தேக்கரண்டி

மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி

இஞ்சி பூண்டு பேஸ்ட் - இரண்டு தேக்கரண்டி

கொத்தமல்லித் தழை - ஒரு பெரிய கொத்து

பிரெட் க்ரெம்ஸ்

கலக்கி கொள்ள:

மைதா - கொஞ்சம்

முட்டை - இரண்டு

செய்முறை:

கீமாவை நல்ல கழுவி தண்ணீர் இல்லாமல் வடித்து அதில் உப்பு போட்டு வேகவைக்கவும்.

வேக வைத்ததில், வெங்காயம், கொத்தமல்லி, ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு பேஸ்ட்,கொஞ்சம் உப்பு சேர்த்து ஒரு தேக்கரண்டி எண்ணெயில் வதக்கி கொள்ளவும்.

உருளைக்கிழங்கு, கேரட் இரண்டையும் நல்ல வேகவைத்து சூட்டுடன் மசித்து அதில் ஒரு தேக்கரண்டி மிளகாய் தூள், ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு பேஸ்ட், உப்புபோட்டு நல்ல கலந்து உருண்டை பிடித்து வைக்கவும்.

மைதாவும் முட்டையும் சேர்த்து தோசைமாவும் பதத்திற்கு கலந்து தனியாக வைக்கவும்.

உருளைக்கிழங்கு உருண்டையில் கீமா கலவையை வைத்து பூரணத்திற்கு மூடுவது போல் மூடி வடை போல் தட்டி மைதா முட்டை கலவையில் தோய்த்து பிரெட் க்ரெம்ஸில் பிரட்டி தட்டில் அடுக்கி ஃப்ரிட்ஜில் வைக்கவும்.

தேவையான போது எடுத்து டீப் ஃப்ரை செய்து தக்காளி சாஸுடன் பரிமாறவும்.

குறிப்புகள்: