கிளங்கா மீன் ப்ரை( lady fish)
0
தேவையான பொருட்கள்:
கிளங்கா மீன் - பத்து துண்டு
மிளகு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
பச்சை மிளகாய் - இரண்டு
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 1/2 மேசைக்கரண்டி
செய்முறை:
மீனை கழுவி சுத்தம் செய்யவும்.
பச்சை மிளகாய், மிளகு, சீரகம் மூன்றையும் அரைக்கவும். அரைத்த கலவையில் மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு, உப்பு, சிறிதளவு புளி தண்ணீர் சேர்க்கவும். தேவையான அளவு சிறிது தண்ணீரும் சேர்த்து பிசைந்து கொள்ளவும். மீனில் இந்த மசாலாவை பிசறி பத்து நிமிடம் ஊற வைத்து எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.