கிளங்கா மீன் சால்னா (lady fish)
தேவையான பொருட்கள்:
கிளங்கா மீன் - ஐந்து துண்டு
தாளிக்க:
எண்ணெய் - நான்கு தேக்கரண்டி
மிளகு - ஒரு மேசைக்கரண்டி
கடுகு - ஒரு மேசைக்கரண்டி
சீரகம் - ஒரு மேசைக்கரண்டி
சோம்பு - ஒரு மேசைக்கரண்டி
வெந்தயும் - ஒரு மேசைக்கரண்டி
பொடியாக நறுக்கிய வெங்காயம் - மூன்று
பூண்டு - நான்கு பல்
கறிவேப்பிலை
புளி - ஒரு சிறிய லெமன் சைஸ்
அரைக்க:
தேங்காய் - நான்கு பத்தை
தக்காளி - இரண்டு
மிளகாய் தூள் - இரண்டு தேக்கரண்டி
தனியாத் தூள் - இரன்டு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
கொத்தமல்லி தழை - கால் கட்டு (கடைசியில் மேலே தூவ)
செய்முறை:
மீனை சுத்தம் செய்து நன்கு கழுவி வைக்கவும்.
சட்டியில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ளவைகளை போட்டு தாளிக்கவும்.
அரைக்க கொடுத்துள்ளவைகளை அரைத்து அதில் ஊற்றி மசாலா வாசனை போகும் வரை கொதிக்க விடவும்.
பிறகு புளியை கெட்டியாக கரைத்து ஊற்றி புளி வாசம் அடங்கியதும் மீனை போட்டு கொத்தமல்லி தூவி தீயை சிம்மில் வைத்து இரண்டு நிமிடம் வேக விடவும்.
பிறகு கரண்டியால் கலக்காமல் சட்டியை ஒரு கையால் பிடித்துக் கொண்டு உளசி விட வேண்டும் மீண்டும் இரண்டு நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும்.
சுவையான கிளங்கா மீன் சால்னா ரெடி.