கிரிஸ்பி சமோசா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சமோசா தாள் - 1 பாக்கெட்(feuille de brick)

மீன் டின் - 1

வெங்காயம் - 1

கேரட் - 2

மல்லி,புதினா - சிறிது

மிளகு தூள் - 1/2 ஸ்பூன்

உப்பு - சிறிது

முட்டை - 2

பூண்டு தூள் - சிறிது

செய்முறை:

மீன் டின்னில் உள்ள நீரை (அ) எண்ணெய்யை வடித்து விடவும்,வடித்த மீனுடன் பொடியாக நருக்கிய வெங்காயம்,மல்லி,பொதினா,துருவிய கேரட்,உப்பு,மிளகு தூள்,பூண்டு தூள் ஆகியவற்றை சேர்த்து கிளரி வைக்கவும்.முட்டைகளை கலக்கி வைக்கவும்,

சமோச தாள் வட்டமாக இருக்கும்,அதை 4 சம பாகங்களாக வெட்டவும்.

1பாகத்தை எடுத்து அதன் மேல் முட்டையை தடவவும்,பிறகு அதன் மேல் மீன் கலவையை வைக்கவும்.

இதை எல்லா பக்கமும் மூடும்படி மடித்து அவன் ட்ரேயின் மேல், மூடிய பாகம் கீழ் நோக்கி இருக்குமாறு அடுக்கவும்.150° சூட்டில் 20 நிமிடங்கள் வேகவிட்டு எடுக்கவும்.

சூடாக சாப்பிட நன்றாக இரூக்கும்.மாலை டிஃபனுக்கு ஏற்றது.கொஞ்சம் கூட எண்ணைய் இல்லாத சமோசா ரெடி.

குறிப்புகள்: