கிரில்டு காடை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

காடை - 4

மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1டீஸ்பூன்

மிளகுத்தூள் - 1டீஸ்பூன்

சீரகத்தூள் -அரைடீஸ்பூன்

ஆலிவ் ஆயில் - 1டேபிள்ஸ்பூன்

எலுமிச்சை பழம் - 1 அல்லது வினிகர் 2டீஸ்பூன்

திக் சோயா சாஸ் - 1 டீஸ்பூன்

நறுக்கிய மல்லி இலை - சிறிது அலங்கரிக்க.

உப்பு - தேவைக்கு.

செய்முறை:

நான் உபயோகித்தது ஃப்ரோசன் காடை.தோல் உரித்து உட்புறம் ஏதும் கழிவு இருந்தால் நீக்கி சுத்தம் செய்து நன்கு அலசி மஞ்சள் தூள் போட்டு பிரட்டி சிறிது நேரம் வைக்கவும்.கவுச்சி வாடை போய் விடும்.ஆங்காக்கு கீறி விடவும்.பின்பு ஒரு முறை அலசி தண்ணீர் வடிகட்டவும்.

பின்பு ஒரு பவுலில் எலுமிச்சை சாறு,இஞ்சி பூண்டு பேஸ்ட்,உப்பு ,மிளகு,சீரகத்தூள்,ஆலிவ் ஆயில் சோயா சாஸ் எல்லாம் சேர்த்து கலந்து கொள்ளவும்.

கலந்த மசாலா மிக்ஸில் காடையை சேர்த்து எல்லாப்பக்கமும் படுமாறு பிரட்டி இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும்.

ஓவனை முற்சூடு செய்து கொள்ளவும்.கிரில் ப்லேட்டில் வைத்து, மீடியம் ப்லேம் செட் செய்து விடவும்.

கால்மணி நேரம் ஆனவுடன் காடையை திருப்பி வைக்கவும்.மறுபக்கம் வேக திரும்ப கால்மணி நேரம் ஆகும்.ஒரு ஃபோர்க்கை வைத்து குத்திப் பார்த்தால் சதை பிய்ந்து வரும்.வெந்ததை தெரிந்து கொள்ளலாம்.மேல் தோலுடன் சுட்டாலும் அருமையாக இருக்கும்.உப்பு பார்த்து சேர்க்கவும் .காடை ஏற்கனவே கடுக்கும்.

பக்குவமாக கிரில் செய்த காடை ரெடி.

இதனை நறுக்கிய மல்லி இலை தூவி பரிமாறவும்.

குறிப்புகள்: