கிண்ணத்தப்பம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

இட்லி அரிசி - 400 கி

தேங்காய் பால் - 2 தேங்காயிலிருந்து எடுத்த கட்டி பால்

சீனி - 300 கி

முட்டை - 3

ஏலக்காய் தூள் - 1 டீஸ்பூன்

சீரகம் - 1/2 டீஸ்பூன்

செய்முறை:

அரிசியை 2 மணிநேரம் ஊற வைத்துக்கொள்ளவும்.

ஊறிய அரிசியை தண்ணீர் வடித்து,கிரைண்டரில் இட்டு கொஞ்சம் தேங்காய் பாலை விட்டு அரைக்கவும்.

சிறிது, சிறிதாக தே.பாலை சேர்த்து வெண்ணெய் போல அரைத்துகொள்ளவும்.

கிரைண்டரில் இருந்து மாவை எடுத்து தனியாக வைக்கவும்.

மிக்ஸி ஜாரில் முட்டைகளை உடைத்து ஊற்றி 2 நிமிடம் அடித்து கொள்ளவும்

அரைத்து வைத்துள்ள மாவில் அடித்த முட்டயையும்,சீனியையும் போட்டு நன்றாக கடைய வேண்டும் . மீதி தேங்காய் பால் இருந்தால் அதையும் சேர்த்து கலந்து சிட்டிகை உப்பு சேர்த்து, இந்த கலவையை ஒரு ஜூஸ் வடிகட்டியில் வடிக்கவும்

அடுப்பில் இட்லி சட்டியை தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். ஒரு பெரிய விளிம்புள்ள தட்டில் நெய் தடவி கொண்டு , மாவில் ஏலப்பொடி, சீரகம் போட்டு கலக்கி தட்டில் ஊற்றவும்

இதை அப்படியெ இட்லி சட்டியில் வைத்து மூடி வேகவைக்கவும்.அரை மணிநெரம் கழித்து திரந்து ஒரு கத்தியால் குத்தி பார்க்கவும். ஒட்டாமல் வந்தால் அந்த தட்டை எடுத்து விட்டு, மீதி மாவை இன்னொரு தட்டில் ஊற்றி வேக வைக்கவும்.

ஆறியதும் கத்தியால் துண்டுகள் போட்டு சாபிடலாம்.

மாவு பதம் - ஆப்ப மாவை விட சற்று தளர்த்தியாக இருக்க வேண்டும்

குறிப்புகள்: