கிட்ஸ் போன்லெஸ் சிக்கன் ஃப்ரை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சிக்கன் ப்ரெஸ்ட் - அரை கிலோ

எண்ணெய் - 100 மில்லி

சில்லி பவுடர் - 1 டீஸ்பூன்

இஞ்சி பூண்டு - 1 டீஸ்பூன்

தயிர் - 1 டேபிள் ஸ்பூன்

லெமன் ஜூஸ் - 1 டேபிள் ஸ்பூன்

ப்ரெட் க்ரம்ப்ஸ் - 1 டேபிள் ஸ்பூன்

கடலை மாவு - 1 டேபிள் ஸ்பூன்

முட்டை வெள்ளைக்கரு - 1

ரெட் கலர் - பின்ச்

உப்பு - தேவைக்கு.

செய்முறை:

தேவையான பொருட்களை தயார் படுத்திக்கொள்ளவும்.

சிக்கனை சிறிய துண்டுகளாக்கி கழுவி தண்ணீர் வடிகட்டிக்கொள்ளவும்.

வடிகட்டிய சிக்கனில், உப்பு, தயிர், லெமன் ஜூஸ், இஞ்சி பூண்டு, சில்லி பவுடர், ப்ரெட் க்ரெம்ப்ஸ், கடலை மாவு, முட்டை வெள்ளைக்கரு, ரெட் கலர் சேர்த்து நன்கு பிசறி 1 மணி நேரம் ஊறவைக்கவும்.

ஒரு நாண்ஸ்டிக் பானில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சிக்கனை போட்டு சிவக்க பொரித்தெடுக்கவும்.

டிஸ்யுவில் வைத்து எண்ணெய் இருந்தால் எடுத்து விடவும்.

அதே எண்ணெயில் ப்ரென்ச் ப்ரைஸ் பொரித்தெடுத்து உடன் பரிமாறலாம்.

சுவையான ஜூஸியான கிட்ஸ் சிக்கன் ஃப்ரை ரெடி.

குறிப்புகள்: