கிட்னி ஃபிரை
0
தேவையான பொருட்கள்:
கிட்னி - கால் கிலோ
மிளகாய் தூள் - முக்கால் தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - கால் தேக்கரன்டி
உப்பு - அரை தேக்கரண்டி
தக்காளி - பாதி
இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - இரண்டு தேக்கரண்டி
செய்முறை:
கிட்னியில் எண்ணெய், கரம் மசாலா தவிர அனைத்து பொருட்களையும் போட்டு பிசறி பத்து நிமிடம் ஊற வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி பிசறி வைத்ததை போட்டு நல்ல வதக்கி ஐந்து நிமிடம் சிம்மில் வைத்து கடைசியில் கரம் மசாலா, கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.