கிச்சிடி
தேவையான பொருட்கள்:
பாசுமதி அரிசி - இரண்டு ஆழாக்கு
பச்ச பருப்பு - அரை ஆழாக்கு
வெங்காயம் - இரண்டு
தக்காளி - ஒன்று
பச்சை மிளகாய் - இரண்டு
இஞ்சி பூண்டு பேஸ்ட் - இரண்டு தேக்கரண்டி
மஞ்சள் துள் - கால் தேக்கரண்டி
கொத்தமல்லி புதினா - கொஞ்சம்
எண்ணெய் - கால் டம்ளர்
பட்டை, ஏலம், கிராம்பு - தலா ஒன்று
செய்முறை:
பச்சபருப்பை லேசாக வறுத்து ஊறவக்கவும். அரிசியையும் தனியாக ஊற வைக்கவும்.
குக்கரில் (அ) எலக்ட்ரிக் குக்கரில் எண்ணெயை காயவைத்து பட்டை, ஏலம், கிராம்பு போட்டு பொரிந்ததும் வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட், கொத்தமல்லி புதினா போட்டு தாளித்து, தக்காளி, பச்சைமிளகாயை ஒடித்து போட்டு மஞ்சள் தூள் சேர்த்து ஊற வைத்த பச்ச பருப்பையும் சேர்த்து நன்கு கிளறவும்.
பிறகு அரிசியையும் சேர்த்து ஒன்றுக்கு ஒன்றரை மடங்கு தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு குக்கரில் இரண்டு விசில் விட்டு மூன்றாவது விசில் வரும் போது இறக்கி விடவும்.
ஆறியதும் சாதத்தை கிளறி விட்டு வேறு பாதிரத்தில் மாற்றி விடவும்.
சுவையான கிச்சிடி சாதம் ரெடி.