கிங் ஃபிஷ் லேயர் பிரியாணி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கிங் ஃபிஷ் (சீலா மீன்) - அரை கிலோ

பாஸ்மதி அரிசி - அரை கிலோ

எண்ணெய் - 150 மில்லி

நெய் - 50 மில்லி

தக்காளி - 150 கிராம்

வெங்காயம் - 100 கிராம் (மெலிதாக கட் செய்யவும்)

வெங்காயம் - 100 கிராம் ( மெலிதாக கட் செய்து பொரித்து வைக்கவும்)

மிளகாய் - 3

தயிர் - 100 மில்லி

எலுமிச்சை - 1

இஞ்சி பூண்டு - ஒன்றரை டேபிள் ஸ்பூன்

ஏலம், பட்டை, கிராம்பு - தலா 2

சில்லி பவுடர் - 1 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்

கொத்தமல்லி இலை - 2 டேபிள் ஸ்பூன்

புதினா - 2 டேபிள்ஸ்பூன்

லெமன் யெல்லோ கலர் - பின்ச்

ரெட் கலர் - அரை பின்ச்

பிரியாணி மசாலா - 1 டீஸ்பூன் (விருப்பப்பட்டால்)

உப்பு - தேவைக்கு

செய்முறை:

மீனை சுத்தம் செய்து நன்கு அலசி உப்பு, மஞ்சள் தூள் போட்டு பிரட்டி கழுவி நீர் வடிகட்டி வைக்கவும்.

மீனில் ஒரு ஸ்பூன் சில்லி பவுடர், பாதி லைம் ஜூஸ், உப்பு சேர்த்து மிக்ஸ் செய்து வைக்கவும்.

வெங்காயம், தக்காளி ,புதினா, மல்லி இலை மெலிதாக கட் செய்து வைக்கவும்.

தனியாக வெங்காயத்தை கார்ன் மாவு அல்லது அரிசி மாவு கலந்து மிக்ஸ் செய்து சிவக்க பொரித்து எடுத்து வைக்கவும்.

பாஸ்மதி அரிசியை அலசி அரை மணி நேரம் ஊற வைத்து முக்கால் பதம் வெந்து வடித்து வைக்கவும்.

அடிகனமான பாத்திரம் அல்லது நாண்ஸ்டிக் பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், வெங்காயம் பொரித்தெடுக்கவும், பின்பு மீனைப்போட்டு முறுகாமல் பொரித்தெடுக்கவும்.

மீனை தனியே எடுத்து வைக்கவும்.

அதே பாத்திரத்தில் ஏலம், பட்டை, கிராம்பு போடவும். வெங்காயம் போட்டு வதக்கவும். இஞ்சி பூண்டு போட்டு வதக்கி, புதினா, மல்லி இலை, தக்காளி, மிளகாய், பிரியாணி மசாலா, தயிர், பாதி லைம் ஜூஸ் போட்டு மூடி சிம்மில் வைக்கவும். எண்ணெய் தெளிந்து வரும்.

ரெடியான பாதி மசாலாவை எடுத்து பொரித்த மீனில் சேர்த்து வைக்கவும்.

பிரியாணி மசாலா உள்ள பாத்திரத்தில் உதிரியாக வடித்த சாதத்தை பாதி எடுத்து பரத்தி போட்டு, பாதி பொரித்த வெங்காயம் தூவி,மீன் கலவையை வைத்து, நெய் சிறிது சேர்த்து மேலே மீண்டும் வடித்த சாதத்தை பரத்தவும்,பொறித்த வெங்காயம் சேர்க்கவும்,நெய் விடவும்.கலர் பொடியை நீரில் கலந்து தெளிக்கவும். அலுமினியம் ஃபாயில் போட்டு மூடி தோசை தவா மீது பிரியாணி பாத்திரம் வைத்து சிம்மில் 15-20 நிமிடம் வைக்கவும்.

கால் மணி நேரம் கழித்து திறந்து ஒரு பக்கமாக மேலிருந்து கீழே வரை மிக்ஸ் செய்து நடுவில் உள்ள மீன் உடையாமல் பரிமாறவும்.

சூடான சுவையான கிங் ஃபிஷ் லேயர் பிரியாணி ரெடி.

குறிப்புகள்: