காஷ்மீரி லாம்ப் க்ரேவி
தேவையான பொருட்கள்:
மட்டன் - அரைக் கிலோ
எண்ணெய் - 2 டீஸ்பூன்
வெங்காயம் - 2 (மீடியம் சைஸ்)
பே லீஃப் - 1
கிராம்பு -2
பட்டை - சிறிய துண்டு
கரம் மசாலா - அரைஸ்பூன்
இஞ்சிபூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
சில்லி பவுடர் - 1 டீஸ்பூன்
பாதாம் பருப்பு தூள் - 1 டேபிள் ஸ்பூன்
தயிர் - 100 மில்லி
க்ரீன் ஆப்பிள் - 1-2(விருப்பப்பட்டால்)
கொத்தமல்லி இலை - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
ஆனியன், மல்லி இலை கட் பண்ணிக்கொள்ளவும். க்ரீன் ஆப்பிள் நீக்கி பொடியாக சாப் பண்ணிக்கொள்ளவும். மட்டனை கழுவி தண்ணீர் வடிகட்டவும்.
குக்கரில் எண்ணெய் விட்டு காய்ந்தவுடன் ஆனியனை ஃப்ரை பண்ணவும். பே லீஃப், கிராம்பு, பட்டை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். ஆனியன் சாஃப்டாக வேண்டும், ப்ரவுன் ஆகக் கூடாது.
மட்டன் பீஸ் சேர்க்கவும். அடுப்பை சிம்மில் வைத்து,இஞ்சி பூண்டு பேஸ்ட், கரம் மசாலா, சில்லி பவுடர், பாதாம் பருப்பு பவுடர் சேர்த்து கிளறவும்.
பின்பு தயிர் சேர்த்து பிரட்டி விடவும். ஆப்பிளை சேர்க்கவும். மல்லி இலை சேர்க்கவும். குக்கரை மூடி மூன்று விசில் வைத்து இறக்கவும்.
மட்டன் வெந்து விட்டதா என்று செக் செய்து மல்லி இலை தூவி பரிமாறவும்.
சுவையான காஷ்மீரி லேம்ப் கிரேவி ரெடி.