கார மாங்காய் பச்சடி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மாங்காய் - 1

காய்ந்த மிளகாய் - 1

கடுகு - 1ஸ்பூன்

கருவேப்பிலை - சிறிது

மஞ்சள் தூள் - சிறிது

சீனி - 1கப்

உப்பு - சிறிது

எண்ணெய் - சிறிது

செய்முறை:

மாங்காயை கழுவிவிட்டு தோலுடன் சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி அதில் கடுகு,மிளகாய்,கருவேப்பிலை போட்டு தாளித்து மஞ்சள் தூள் சேர்க்கவும்.

அதில் மாங்காய் துண்டுகளைப் போட்டு தேவையான தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு வேக விடவும்.

தண்ணீர் வற்றியதும் அதில் சீனி போட்டு அடுப்பை சிம்மில் வைக்கவும்.

எண்ணெய் பிரிந்து வந்ததும் அடுப்பை அணைக்கவும்.

குறிப்புகள்: