கார கறி கோடா
தேவையான பொருட்கள்:
கோடா - 200 கிராம்
கறி - கால் கிலோ
வெங்காயம் - இரண்டு
தக்காளி - மூன்று
பச்சை மிளகாய் - ஒன்று
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தேங்காய் - இரண்டு பத்தை
எண்ணெய் - மூன்று தேக்கரண்டி
பட்டை, லவங்கம், ஏலம் - தலா ஒன்று
கொத்தமல்லி தழை - கொஞ்சம்
புதினா - கொஞ்சம்
செய்முறை:
சட்டியில் எண்ணெயை காய வைத்து பட்டை, லவங்கம், ஏலம் போட்டு வெடித்ததும் வெங்காயம் போட்டு வதக்கி இஞ்சி, பூண்டு பேஸ்ட் போட்டு கிளறி பச்சை வாசனை போனதும் கொத்தமல்லி, புதினா, பச்சை மிளகாய் போட்டு இரண்டு நிமிடம் வதக்கி தக்காளியை போட்டு மூடி போட்டு மூன்று நிமிடம் சிம்மில் வைக்கவும்.
தக்காளி மசிந்ததும் தூள் வகைகள், கறியை போட்டு கிளறி சிம்மில் வைத்து கறியை வேக விடவும். குக்கரிலும் வைத்து இறக்கலாம்.
கறி வெந்ததும் கோடா ஒன்றிற்கு இரண்டு பங்கு தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் கோடாவை போட்டு தேங்காயையும் அரைத்து ஊற்றி அடிபிடிக்காமல் கிளறி விட்டு கோடா வெந்ததும் இறக்கி பரிமாறவும். இதை இறாலிலும் போடலாம்.
இதற்கு தொட்டுக்கொள்ள புதினா துவையல், ஊறுகாய் பொருத்தமாக இருக்கும்.