காரப் பொடி ரசம்(மீன்)
தேவையான பொருட்கள்:
காரப்பொடி மீன் 1/4கிலோ
சின்ன வெங்காயம் ஒரு கை அளவு
புளி எலுமிச்சை அளவு
3 முழு பூண்டு
குழம்பு மிளகாய் தூள் 4ஸ்பூன்
நல்ல மிளகு தூள் 3 ஸ்பூன்
கடுகு 1ஸ்பூன்
பச்சை மிளகாய் 4
கொத்தமல்லி, கருவேப்பிலை சிறிது
நல்லெண்ணெய், உப்பு தேவையான அளவு
செய்முறை:
மீனை தலை நீக்கி விட்டு,சுத்தம் செய்து கொள்ளவும்.
புளியை நீர்க்க கரைத்து கொள்ளவும்.
பூண்டை ஒன்றிரண்டாக தட்டி கொள்ளவும்.
வெங்காயத்தையும்,தக்காளியையும் பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வாணலியில் எண்ணை விட்டு கடுகுபோட்டு வெடித்தவுடன் இரண்டாக நறுக்கிய பச்சை மிளகாய், கருவேப்பிலை, சின்னவெங்காயம், தக்காளி , ஆகியவற்றை ஒவ்வொன்றாக போட்டு நன்கு வதக்கவும்.
பின்பு,புளி கரைசலை சேர்த்து,அதனுடன் ,மிளகாய் தூள்,உப்பு சேர்த்து கிளறி மூடி வைத்து கொதிக்க விடவும்.
ரசம் கொதி வந்தவுடன் மிளகுப் பொடி தட்டி வைத்த பூண்டு,மீன் ஆகியவற்றைபோட்டு கிளறி விட்டு கொதிக்க விடவும்.
நான்கு கொதி கொதித்தவுடன் கொத்துமல்லி இலை தூவி இறக்கவும்.
இதனை சூடான சாதத்தில் ஊற்றி சாப்பிட சுவையாக இருக்கும்.