காரட் கீர்
1 - Ok!
2 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
காரட் 1/2 கிலோ
சக்கரை 1/4 கிலோ
நெய் - 2 ஸ்பூன்
முந்திரி - 10
ஏலப்பொடி - 1/2ஸ்பூன்
பால் - 1 டம்ளர்
செய்முறை:
காரட்டை தோல் சீவி துருவிக் கொள்ளவும்.
அதை பால் ஊற்றி குக்கரில் ஒரு விசில் வரும் வரை வைக்கவும்.
பின் ஆறியதும் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் நெய் ஊற்றி அதில் முந்திரி பருப்பை போட்டு வறுக்கவும்.
பின் அதில் அரைத்த விழுதை போட்டு நன்கு வதக்கவும்.
சக்கரை சேர்த்து கிளறவும்
சுருள வதக்கி ஏலப்பொடி தூவி இறக்கவும்.
ஒரு டம்ளர் பாலில் இரண்டு ஸ்பூன் காரட் விழுது சேர்த்து நன்கு கலந்து பறிமாறலாம்.