காய போட்ட குடல்
தேவையான பொருட்கள்:
முழு ஆட்டு பெருங்குடல் - ஒன்று
மிளகாய் தூள் - இரண்டு மேசைக்கரன்டி
உப்பு - ஒரு மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் - இரண்டு மேசைக்கரண்டி
மிளகு - ஒரு தேக்கரண்டி
செய்முறை:
குடலை நல்ல சுத்தப்படுத்தி கழுவி தண்ணீர் முழுவதும் வடித்து அதில் மேலே குறிப்பிட்டுள்ள மசாலாக்களை போட்டு பிரட்டி பத்து நிமிடம் கழித்து கறிக்கு சொன்ன மாதிரி ஒரு புது சனல் கயிறு, புது கோணி ஊசி எடுத்து துண்டு போட்டு துண்டு நல்ல உள்ளங்கை அளவு இருக்கனும்.
ஊசியில் கோர்த்து மாலை போல் கொடியில் காய போடவும்.
வெயில் வரும் போது போடவும், வெயில் போனதும் எடுத்து உள்ளே வைக்கனும்.
ஒரு சுருட்டு சுருட்டியும் கொள்ளலாம். நல்ல காய்ந்த வத்தல் வடாம் மாதிரி ஆகனும்.
பிறகு அப்படியே எண்ணெயில் பொரித்து சாப்பிட வேண்டியது தான்.
இந்த குடல் பொரிக்கும் போது வெடிக்கும் கொஞ்சம் தள்ளி நின்று கொண்டு பொரிக்கவும்.