காய்ன் பரோட்டா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மைதா - 2 கப்

உப்பு - தேவைக்கு

தண்ணீர் - தேவைக்கு

பேக்கிங் சோடா - கால்ஸ்பூன்

நெய் - 2 டீஸ்பூன்

எண்ணெய் - கால் கப்

செய்முறை:

பேக்கிங் சோடா, நெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். மைதா மாவு சேர்க்கவும், தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து பிசறி வைக்கவும். அரை மணி நேரம் கழித்து நன்கு குழைத்து பெரிய உருண்டையாக்கி வைக்கவும்.

பின்பு அரைமணி நேரம் கழித்து பெரிய உருண்டையை இரண்டாக பிரிக்கவும்.

ஒரு பிரிவை உருண்டையாக்கி சப்பாத்தி கட்டையில் அல்லது பெரிய தட்டில் பரத்தவும். எண்ணெய் தடவவும்,சிறிது மாவு தூவவும். அதனை ரோல் செய்யவும். கத்தி கொண்டு ஆறாக கட் செய்து கொள்ளவும்.

இதே போல் மற்ற பிரிவையும் தயார் செய்யவும். மொத்தம் 12 பகுதி கிடைக்கும்.

ஒவ்வொன்றாக ரோல் செய்த பக்கம் மேல் தெரியும் படி வைத்து சிறிது மாவு பிரட்டி சப்பாத்தி உருளை கொண்டு சிறியதாக பரத்தி எண்ணெய் சிறிது விட்டு சுட்டு எடுக்கவும்.

சுவையான காய்ன் பரோட்டா ரெடி. இதனை மட்டன், சிக்கன் குருமா, வெஜ் குருமாவுடன் பரிமாறவும்.

குறிப்புகள்: