காய்கறி ஊறுகாய்
தேவையான பொருட்கள்:
கேரட் - 100 கிராம்
நாட்டு வெங்காயம் - 150 கிராம்
பழுக்காத பூசணிக்காய் - 150 கிராம்
பெரிய பூண்டு - ஒன்று
பீன்ஸ் - 100 கிராம்
எலுமிச்சைப்பழம் - 4
மாங்காய் - ஒன்று
காய்ந்த மிளகாய் - 20
வெந்தயம் - ஒரு ஸ்பூன்
கடுகு - அரை ஸ்பூன்
நல்லெண்ணெய் - 200 மில்லி
வினிகர் - 250 மில்லி
உப்பு - 4 டீஸ்பூன்
செய்முறை:
மாங்காய், எலுமிச்சைப்பழம், பீன்ஸ், தோல் எடுத்த பூசணிக்காய், கேரட் அனைத்தையும் சிறு கட்டங்களாக நறுக்கிக் கொள்ளவும்.
பூண்டு, நாட்டு வெங்காயத்தை தோல் உரித்து ஆனால் வெட்டாமல், நறுக்கிய காய்கறிகளோடு சேர்த்துக்கொள்ளவும்.
வாணலியை காயவைத்து கடுகை வெடிக்கவிட்டு எடுத்து வைத்து கொள்ளவும். வெந்தயத்தை தீயவிடாமல் பதமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும். காய்ந்த மிளகாயை வறுத்துக் கொள்ளவும்.
அதே வாணலியில் எண்ணெய் ஊற்றி தயார் பண்ணி வைத்துள்ள காய்கறிகளை நன்றாக வதக்கி, வறுத்த மிளகாய், வெந்தயம், கடுகு மூன்றையும் மிக்ஸியில் கொரகொரப்பாக பொடியாக்கி, இதனுடன் கொட்டி உப்பு சேர்த்து 3 அல்லது 4 நிமிடம் கிண்டவும்.
பிறகு வினிகர் சேர்த்து மீண்டும் 2 நிமிடம் கிளறிவிட்டு இறக்கி, நன்றாக ஆறியவுடன் ஈரமில்லாத ஒரு பாட்டிலில் எடுத்து வைக்கவும். இதை 4 அல்லது 5 நாட்கள் வைத்திருந்து பயன்படுத்தலாம்.