கல்யாண தால்ச்சா
தேவையான பொருட்கள்:
துவரம்பருப்பு - 100 கிராம்
கடலைபருப்பு- 50 கிராம்
ஆட்டுக்கறி (எலும்பு அதிகமாக)- 1/4 கிலோ
இஞ்சி பூண்டு விழுது- 2 ஸ்பூன்
புளி - பெரிய நெல்லிகாய் அளவு உருண்டை
காய்கறிகள் - விருப்பப்பட்டவை (வாழைக்காய், சௌசௌ, மாங்காய், கத்திரிக்காய், முருங்கை, பூசணி, உருளை, கேரட்....)
உப்பு-தேவைக்கு
தேங்காய் விழுது- கால் கப்
கறிமசாலா தூள்- 5 ஸ்பூன்
மிளகாய் தூள்- 1 ஸ்பூன்
தக்காளி-3
சின்ன வெங்காய விழுது- கால் கப்
இஞ்சி பூண்டு விழுது- 5 ஸ்பூன்
எண்ணெய்-3 மேசை கரண்டி
பிரிஞ்சி-1
மஞ்சள் தூள்- கால் ஸ்பூன்
கொத்தமல்லி,புதினா- அரை கப்
வெங்காயம்-3
பட்டை -1
ஏலக்காய் - 3
கிராம்பு - 3
கடுகு - கால் தேக்கரண்டி
செய்முறை:
கடலைபருப்பு மற்றும் துவரம் பருப்பை அவித்துக்கொள்ளவும்
கறியை இஞ்சி பூண்டு விழுது 2 ஸ்பூன் சேர்த்து அவிக்கவும்
சமைக்கும் பாத்திரத்தில் புளி கரைத்த நீர், காய்கறிகள், உப்பு,தேங்காய் விழுது, கறிமசாலா தூள், தக்காளி, சின்ன வெங்காய விழுது,இஞ்சி பூண்டு விழுது, கொத்தமல்லி,புதினா சேர்த்து காய்கறிகள் வேகும் வரை கொதிக்க விடவும்
காய்கறி வெந்ததும் பருப்பு மற்றும் கறியை சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்
தனியாக ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, பட்டை,ஏலக்காய்,லவங்கம், பிரிஞ்சி சேர்த்து தாளிக்கவும்
பின் வெங்காயம் சேர்த்து பொன்னிறமானதும் மிளகாய் தூள் சேர்த்து குழம்பில் சேர்த்து கொதிக்க விடவும்.
இறக்கும் போது கொத்தமல்லி தூவி இறக்கவும்