கலத்தப்பம்
தேவையான பொருட்கள்:
புழுங்கல் அரிசி (அ) இட்லி அரிசி - 1 கப்
தேங்காய் துருவியது 1 கப்
சின்ன வெங்காயம் 10
கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
அரிசியை நன்றாக ஊற வைத்து. தேங்காயுடன் சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும். தண்ணீர் அதிகம் சேர்க்க வேண்டாம்.
வெங்காயத்தை பொடியாக அரிந்து கொள்ளவும். ஒரு கடாயை அடுப்பில் வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு கொஞ்சம் வெங்காயத்தை போட்டு, கறிவேப்பிலையையும் போட்டு சிவந்ததும் , உப்பு போட்டு கலக்கிய மாவை 2 கரண்டி அளவில் எடுத்து ஊற்றவும். ஒரு குவிந்த மூடியால் மூடி வைத்து தீயை மெதுவாக எரிய விடவும்
5 நிமிடம் கழித்து திறந்து பார்த்தால் அப்பத்தின் ஓரம் முறுகி சிவந்திருக்கும் ஒரு சட்டுவத்தால் திருப்பி போட்டு சுற்றிலும் எண்ணெய் விடவும். வெந்ததும் எடுத்து விடலாம்.
இந்த அப்பம் சற்று கனமாக (2 இஞ்ச்) இருப்பதால் நிதானமாக வேக விட வேண்டும். இதனுடன் தொட்டு கொள்ள மட்டன், சிக்கன் குழம்பு வைத்து கொண்டால் நன்றாக இருக்கும்