கறி வடை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கீமா(கொத்திய கறி ) - 100 கிராம்

பூண்டு - நான்கு பல்

காய்ந்த மிளகாய் - இரண்டு

பச்சை மிளகாய் - ஒன்று

கரம் மசாலா தூள் - கால் தேக்கரன்டி (பட்டை, கிராம்பு, ஏலம்)

தேங்காய் - இரண்டு பத்தை

வெங்காயம் - ஒன்று

கொத்தமல்லி தழை - கால் கட்டு

கடலை பருப்பு - கால் கப்

மைதா, கார்ன்ஃப்ளார் பவுடர் - தலா ஒரு தேக்கரண்டி

ஆலிவ் ஆயில் - ஒரு தேக்கரண்டி

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

செய்முறை:

கடலை பருப்பை அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

அதற்குள் கொத்திய கறியை கழுவி தண்ணீர் இல்லாமல் வடிகட்டி போட்டு அதில் காய்ந்த மிளகாய், பூண்டு, பச்சை மிளகாய், உப்பு போட்டு வதக்கி போட்டு வேக வைத்து தண்ணீரை வற்ற விடவும்.

வற்றியதும் அதில் ஆலிவ் ஆயில், வெங்காயம் போட்டு மேலும் ஒரு முறை பிரட்டி, கொத்தமல்லியும், தேங்காயை பொடியாக அரிந்து அல்லது துருவி சேர்த்து ஊற வைத்த கடலை பருப்பையும் சேர்த்து பிரட்டி விட்டு கரம் மசாலா பொடி சேர்த்து ஆற வைக்கவும்.

ஆறியது மிக்சியில் முதலில் மைதா, கார்ன்ஃப்ளார் மாவை போட்டு பிறகு ஆறிய கலவையை போட்டு நல்ல அரைத்து ஒரு தவ்வாவில் வேண்டிய வடிவில் தட்டி பொத்தெடுக்கவும்.

உதிர்ந்து போனால் முட்டையின் வெள்ளை கருவை சேர்த்து பிசறிக் கொள்ளவும்

குறிப்புகள்: