கறி பிரட்டல் (சுலப முறை)
தேவையான பொருட்கள்:
ஆட்டுக்கறி - அரை கிலோ
வெங்காயம் - கால் கிலோ
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 4
ஏலக்காய், பட்டை, கிராம்பு - தலா ஒன்று
இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்
தேங்காய் விழுது - 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள்தூள் - அரை ஸ்பூன்
மிளகாய்தூள் - 2 ஸ்பூன்
மசாலாத்தூள் - 2 சிறிய ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மல்லிக்கீரை - பாதி கட்டு
எண்ணெய் - 5 அல்லது 6 ஸ்பூன்
தண்ணீர் - 200 மில்லி
செய்முறை:
சுத்தம் செய்த ஆட்டுக்கறியோடு வெங்காயம், தக்காளியை நறுக்கி போட்டு, கீறிய பச்சை மிளகாயை போட்டு, மல்லிக்கீரை தவிர மற்ற அனைத்தையும் அத்துடன் போட்டு, எண்ணெய், தண்ணீர் ஊற்றி குக்கரில் 15 நிமிடங்கள் வேகவைக்க வேண்டும்.
பிறகு கறி வெந்ததை உறுதி செய்துக் கொண்டு, மல்லிக்கீரையை நைசாக நறுக்கி போட்டு, தண்ணீர் இருந்தால் அது வற்றும் வரை அடுப்பில் வைத்து பிரட்டி எடுத்துவிட வேண்டும்.
இது மிக துரிதமாக செய்யக்கூடிய ஒரு கறிவகை.