கறி தக்குடி (கறி கொழுக்கட்டை)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கறி - ஒன்றரை கிலோ

சிவப்பு அரிசி மாவு - ஒரு படி (எட்டு டம்ளர்)

தாளிக்க:

வெங்காயம் - அரை கிலோ

தக்காளி - அரை கிலோ

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 300 கிராம்

பச்சைமிளகாய் - 25 கிராம்

கொத்தமல்லி - அரை கட்டு

புதினா - அரை கட்டு

மிளகாய் தூள் - 3 டீஸ்பூன்

தனியா தூள் - 6 டேபிள் ஸ்பூன்

மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - ஒரு கப்

பட்டை - இரண்டு அங்குல துண்டு மூன்று

ஏலக்காய் - நான்கு

லவங்கம் - நான்கு

மாவில் கலக்க வேண்டியவை:

வெங்காயம் - கால் கிலோ(பொடியாக நறுக்கியது)

பச்சை மிளகாய் - 25 கிராம் (பொடியாக நறுக்கியது)

கொத்தமல்லி - அரை கட்டு(பொடியாக நறுக்கியது)

புதினா - அரை கட்டு (பொடியாக நறுக்கியது)

தேங்காய் - இரண்டு மூடி (துருவியது)

கடைசியில் கரைத்து ஊற்ற:

அரிசி மாவு - அரை கப்

செய்முறை:

கறியை சுத்தமாக நல்ல கழுவிக் கொள்ளவும். மாவில் கலக்கவேண்டிய பொருட்களை கலக்கி தனியாக வைக்கவும்.

எண்ணெய் ஊற்றி பட்டை, லவங்கம், ஏலம், வெங்காயம், இஞ்சி பூண்டு, கொத்தமல்லி புதினா, தக்காளி, பச்சைமிளகாய், கறி, தூள் வகைகள், உப்பு அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு தாளிக்கவும்.

தாளித்ததும், ஒன்றுக்கு மூன்று மடங்கு வீதம் ஆறு கப் ஊற்றவும்.

ஒரு கொதி வந்ததும் அந்த மசாலா தண்ணீர் கொண்டு மாவை விரவ வேண்டும்.

மாவிற்கு தகுந்த கொதி தண்ணி எடுத்து கொண்டால் போதும்.

கொதி தண்ணீர் ஊற்றி ஒரு கட்டை கரண்டி வைத்து கிளற வேண்டும்.

கிளறி கை சூடு பொருக்கும் அளவுக்கு நல்ல விரவி கொழுக்கட்டைகளாக பிடித்து ஒரு தட்டில் வைக்கவும்

கொழுக்கட்டைகளை நல்ல டைட்டாக பினைந்து பிடிக்க வேண்டும் இல்லை என்றால் கிரேவியில் போட்டதும் உடைந்துவிடும்.

இப்போது கொதித்து கொண்டிருக்கும் கறி மசாலா தண்ணீரில் ஒவ்வொரு கொழுக்கட்டையாக போடவும்.

கறி வேகும் நேரத்தில் கொழுக்கட்டையும் (இருபது நிமிடம்)வெந்து விடும்.

கொழுக்கட்டை போட்டு பத்து நிமிடம் கழித்து மாவை கரைத்து ஊற்றி பத்து நிமிடம் வெந்தால் போதும். ரொம்ப போட்டு கிளற கூடாது.

பாதி வெந்து கொண்டிருக்கும் போது ஒரு மேசைக்கரண்டி மாவை ஒரு டம்ளர் தண்ணீரில் கரைத்து ஊற்ற வேண்டும். அடிக்கடி கிளறி விடவேண்டியது இல்லை.

சுவையான தக்குடி ரெடி.

குறிப்புகள்: