கறி கூட்டு
தேவையான பொருட்கள்:
எலும்பில்லாத மட்டன் - கால் கிலோ
எண்ணெய் - இரண்டு தேக்கரண்டி
பட்டர் - அரை தேக்கரண்டி
சிறிய பட்டை - ஒன்று
வெங்காயம் - இரண்டு
தக்காளி - இரண்டு
தயிர் - ஒரு மேசைக்கரண்டி
புதினா - நான்கு மேசைக்கரண்டி
கொத்தமல்லி தழை - இரண்டு மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் - இரண்டு (நாலாக ஒடித்தது)
மிளகாய் தூள் - முக்கால் தேக்கரண்டி
தந்தூரி மசாலா - ஒரு தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - அரை தேக்கரண்டி(பட்டை, ஏலம், கிராம்பு தூள்)
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
சீரக தூள் - கால் தேக்கரண்டி
செய்முறை:
கறியை சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக வெட்டவும்.
குக்கரில் எண்ணெயை காய வைத்து பட்டயை போட்டு வெங்காயம், இஞ்சி பூண்டு, பச்சைமிளகாய் போட்டு நல்லா வதக்கவும்.
பிறகு கறி, புதினா, கொத்தமல்லி தழையை பொடியாக நறுக்கி போடவும்.
அடுத்து தக்காளி அதுவும் பொடியாக நறுக்கி போட்டு தீயை சிம்மில் வைத்து ஐந்து நிமிடம் விடவும்.
அடுத்து எல்லா தூள் வகைகளையும் போட்டு கிளறி தயிரையும் சேர்த்து முக்கால் டம்ளர் தண்ணீர் ஊற்றி குக்கரில் மூன்று, நான்கு விசில் விடவும்.
ஆவி அடங்கியதும் தீயை சிம்மில் வைத்து தண்ணீர் வற்றி கொஞ்சம் கூட்டும், கறியுமாய் இருக்கும் போது இறக்கவும்.