கறி உருண்டைக்குழம்பு
தேவையான பொருட்கள்:
கொத்துகறி - அரை கிலோ
வெங்காயம் - இரண்டு
தக்காளி - இரண்டு
இஞ்சி பூண்டு விழுது - நான்கு கரண்டி
மிளகாய்தூள் - ஒரு கரண்டி
கரம் மசாலாத்தூள் - ஒரு கரண்டி
உருளைக்கிழங்கு - மூன்று
பச்சைமிளகாய் - இரண்டு
மல்லித்தழை - ஒரு கைப்பிடி
ஏலக்காய், கிராம்பு - தலா இரண்டு
பட்டை - சிறிய துண்டு
எண்ணெய் - 100 கிராம்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
ஒரு வெங்காயத்தை பொடியாக நறுக்கவும் இன்னொரு வெங்காயம், தக்காளியை நறுக்கி வைக்கவும்
உருளைக்கிழங்கை விரல் நீளதுண்டுகளாக கொஞ்சம் தடிமனாக நறுக்கி வைக்கவும்.
கறியுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், மிளகுத்தூள், உப்பு சேர்த்து பிசைந்து உருண்டை பிடித்து வைக்கவும்.
ஒரு சட்டியில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து வெங்காயம், தக்காளியைப் போட்டு நன்கு வதக்கவும்.
பின் அதில் இஞ்சி பூண்டு விழுதைப்போட்டு கிளறி மிளகாய்தூள், மஞ்சள்தூள், மசாலாதூள் உருளைகிழங்கைப்போட்டு லேசாக பொரியவிட்டு இரண்டு கிளாஸ் தண்ணீர் விட்டு கொதிக்கவிட்டு உருண்டையைப்போட்டு வேகவிட்டு மேலே மல்லித்தழை தூவவும்.